போலீஸ் கமிஷனரிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஷில்லாங்: 'சாரதா சிட்பண்ட்' மோசடி தொடர்பாக, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று இரண்டாவது நாளாக, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, 'சாரதா' என்ற நிதி நிறுவனம், சிட்பண்ட் மூலம், மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்தது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.'இந்த மோசடி தொடர்பாக, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம், மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் விசாரணை நடத்த வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஷில்லாங்கில், சி.பி.ஐ., அதிகாரி கள் முன், ராஜீவ் குமார், நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம், அதிகாரிகள், ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாள் விசாரணைக்காக, ஷில்லாங்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் முன், ராஜீவ் குமார் நேற்று ஆஜரானார்.இதற்கிடையே, சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக, திரிணமுல், காங்.,கைச் சேர்ந்த முன்னாள், எம்.பி., குணால் கோஷுக்கும், சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியது. இதையேற்று, அவரும், ஷில்லாங்கில் உள், சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.குணால் கோஷ், ராஜீவ் குமார் இருவரிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள், ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின்போது, சி.பி.ஐ., அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ராஜீவ் குமார் திணறியதாகவும், ஊழலுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறியதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201909:22:31 IST Report Abuse
Srinivasan Kannaiya அதெல்லாம் தப்பிச்சிக்குவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X