சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் மூழ்கி 3 மாணவியர் பலி

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 கிணற்றில் மூழ்கி 3 மாணவியர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மாணவி மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற இருவர் என, மூன்று மாணவியர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.விழுப்புரம் அடுத்த கக்கனுாரைச் சேர்ந்த, சகோதரிகள், மணிமொழி, 14; நித்யா, 11. இவர்களது, தோழியர், கவுசல்யா, 12, பவதாரணி, 11. அதே பகுதி தனியார் பள்ளியில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு, படித்து வந்தனர்.நேற்று விடுமுறை என்பதால், காலை, 10:00 மணியளவில், நால்வரும், அதே பகுதியில் உள்ள, தரை கிணற்றில் துணி துவைக்க சென்றனர். மூன்று பேர் கிணற்றின் கரையில் இறங்கி, துணி துவைக்க, நித்யா, வெளியே அமர்ந்திருந்தார்.அப்போது, பவதாரணி, நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். மணிமொழி, கவுசல்யா ஆகியோர், பவதாரணியை மீட்க, கிணற்றில் குதித்துள்ளனர். நீச்சல் தெரியாததால், மூவரும் மூழ்கினர்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நித்யா, கூச்சலிட்டார். சுற்றுப் பகுதியில் யாரும் இல்லாததால், நித்யா வீட்டிற்கு ஓடி, பெற்றோரிடம் கூறினார்.ஓடி வந்த கிராம மக்கள், காலை, 11:00 மணியளவில், கிணற்றில் இறங்கி, சேற்றில் சிக்கியிருந்த மூன்று மாணவியரையும் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து, மூன்று மாணவியரும் இறந்து விட்டதாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-பிப்-201916:15:54 IST Report Abuse
இந்தியன் kumar கன்னி தெய்வங்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201917:47:52 IST Report Abuse
Bhaskaran வாழ்க்கையை தொடங்குமுன்னேயே வாடிப்போன இளம் மலர்கள் பார்க்கவே பரிதாபமாக உள்ளது ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201909:21:55 IST Report Abuse
Srinivasan Kannaiya கருகிய இள மொட்டுக்கள்.... ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X