குடிநீரில் டையாக்சின் நச்சு : ராமதாஸ் எச்சரிக்கை | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிநீரில் டையாக்சின் நச்சு : ராமதாஸ் எச்சரிக்கை

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: 'சென்னை குடிநீர் வாரியம் வினியோகிக்கும் நீரில், டையாக்சின் நச்சு கலந்திருப்பதால், அதை பருகுவோருக்கு, புற்றுநோய் பாதிக்கும் ஆபத்து உள்ளது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை:புழல் ஏரியின் அடிப்பகுதியில் படிந்திருக்கும் படிமங்களில் இருந்து, 32 மாதிரிகளையும், ஆறு தண்ணீர் மாதிரிகளையும் எடுத்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். கடந்த, 2018 ஆகஸ்டில் நடந்த இந்த ஆய்வில், புழல் ஏரி நீரில், நுண் பிளாஸ்டிக் அதிகம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்த குடிநீரை, அப்படியே குடிப்பதால், பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அந்த குடிநீரை காய்ச்சும் போது, நுண் பிளாஸ்டிக் துகள்கள் உருகி, டையாக்சின் என்ற, நச்சுப் பொருளை உருவாக்குகின்றன. இந்த நச்சுப் பொருள், தண்ணீரில் கலந்து விடுகிறது.காய்ச்சப்பட்ட நீரை குடிக்கும் போது, அதனுடன் கலந்து, டையாக்சின் நச்சுவும் நம் உடலுக்குள் செல்கிறது. டையாக்சின் மிக மோசமான வேதிப்பொருள்.அதை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும், மற்ற மூன்று ஏரிகளான, பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் ஆய்வுகள் நடத்தப்படாததால், அங்குள்ள நீரில், நுண் பிளாஸ்டிக் கலந்திருக்கிறதா என, தெரியவில்லை.குடிநீர் வினியோக வழிகளில், வடிப்பான்களை பொருத்துவதோடு, நீரிலிருந்து நுண் பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றுவதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை, அண்ணா பல்கலை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து, அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
11-பிப்-201918:26:14 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj குடிநீரில் நச்சு என்பதை எடுத்துக்காட்டும் திரு ராமதாஸ் அவர்கள் நடுவீதியில் ஆக்கிரமிப்பு நடைபாதைகளில் கடைமேடைகள் சாலைகளில் வீடுகள் பொதுஇடங்களில் உங்கள் கட்சி பிரமுகர் ஆக்கிரமிப்பு போன்றவை காஞ்சிபுரத்தில் அதிகமாக நடைபெற்றுவந்தாலும் என்றாவது ஒருநாள் கூட குரல் கொடுத்திட மறுப்பதன் மறைப்பதன் மற்றும் மறப்பது ஏன் மர்மம் என்ன
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201903:13:36 IST Report Abuse
Bhaskaran அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் குடிநீர் வாரியம் இதனை சுத்திகரிக்க முடியாதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X