ஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (37)
Advertisement
 ஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி

சென்னை: 'ஜி.எஸ்.டி., சட்டத்தை பொல்லாத சட்டமாக மாற்றியது யார்?' என, பிரதமர் மோடிக்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக, டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:'பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், 50 ஆயிரம் குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன; ஐந்து லட்சம் பேர் வேலையிழந்தனர்' என, அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார். இப்போது சொல்லுங்கள்; ஒழுங்காக வரி கட்டி, நடந்து கொண்டிருந்த தொழில்களை நசுக்கியது யார்?ஜி.எஸ்.டி., என்பது, அடிப்படையில் நல்ல கொள்கை. அந்த சட்டத்தை, பொல்லாத சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜி.எஸ்.டி., சட்டம் ஆகியவற்றை அமல்படுத்திய மோடியே, உங்கள் மடியில், இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ?இவ்வாறு, சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-பிப்-201904:20:34 IST Report Abuse
meenakshisundaram சட்டத்தை பற்றி பேசும் இவரும் சட்ட நிபுணருமான இவரின் மனைவியும் நல்ல சட்ட ஆலோசகரை நாடி தங்களின் அருமை புதலவனை தப்புவிக்க சட்டத்தில் ஏதாவது ஓட்டை உள்ளதா என்று அறியவும் .காலம் கடந்து விடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-பிப்-201919:20:44 IST Report Abuse
madhavan rajan ஒழுங்காக வரி கட்டி தொழில் நடந்து கொண்டிருந்தால் காங்கிரஸ் அரசு ஏன் ஜீ எஸ் டி கொண்டுவர முயன்றது. அவைகளை நசுக்கத்தானோ? முன்பே ஒழுங்காக வரி கட்டிக்கொண்டிருந்தால். இப்போது எப்படி வரி வருமானம் முன்பைவிட அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரி வசூல் மையத்தில் நிற்காமல் செல்லும் லாரிகளினால் நன்மையாக இருக்கிறது நிறைய நேரமும், டீசல் மிச்சமாகிறது என்று லாரி ஓட்டுனர்கள் கூறுகிறார்களே. அதற்கு உங்கள் பதில் என்ன?
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-பிப்-201919:34:13 IST Report Abuse
r.sundaram அயோக்கியர்களுக்கு பொல்லாத சட்டம் என்றால் அது நல்லவர்களுக்கு நல்ல சட்டமாகத்தானே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X