ஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (37)
 ஜி.எஸ்.டி., சட்டம் : சிதம்பரம் கேள்வி

சென்னை: 'ஜி.எஸ்.டி., சட்டத்தை பொல்லாத சட்டமாக மாற்றியது யார்?' என, பிரதமர் மோடிக்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக, டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது:'பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், 50 ஆயிரம் குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன; ஐந்து லட்சம் பேர் வேலையிழந்தனர்' என, அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார். இப்போது சொல்லுங்கள்; ஒழுங்காக வரி கட்டி, நடந்து கொண்டிருந்த தொழில்களை நசுக்கியது யார்?ஜி.எஸ்.டி., என்பது, அடிப்படையில் நல்ல கொள்கை. அந்த சட்டத்தை, பொல்லாத சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜி.எஸ்.டி., சட்டம் ஆகியவற்றை அமல்படுத்திய மோடியே, உங்கள் மடியில், இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ?இவ்வாறு, சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X