மாமனாரின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு : மோடி பாய்ச்சல்| Dinamalar

மாமனாரின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு : மோடி பாய்ச்சல்

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (7)
Advertisement
மாமனாரின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு :  மோடி பாய்ச்சல்

குண்டூர்: ''மாமனாருக்கு துரோகம் செய்தவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,'' என, பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள குண்டூரில், நேற்று காலை நடந்த அரசு விழாவில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையத்திற்கு, பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினர். இதன்பின் நடந்த, பா.ஜ., பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் இல்லாத ஆந்திரா என்ற நிலையை ஏற்படுத்தவே, தெலுங்கு தேசம் கட்சியை, என்.டி. ராமா ராவ் துவக்கினார். மாநிலங்களை அலட்சியப்படுத்தி, மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசின் அகங்காரத்தையும் அடக்கினார்.
ஆனால், மாமனார் ராமராவின் முதுகில் குத்தி, ஆட்சியை பிடித்தவர் சந்திரபாபு நாயுடு, அத்துடன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அரசியலில், 'சீனியர்' சந்திரபாபு நாயுடு தான். எப்படி என்றால், தேர்தலில் தோல்வி அடைவது, கூட்டணி மாறுவது, மாமனாரை முதுகில் குத்துவது போன்றவற்றில், அவரை யாரும் மிஞ்ச முடியாது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியைக் காட்டிலும், அதிகமான நிதியை மத்திய அரசு அளித்தது. ஆனால், அந்த நிதியை சரியாக பயன்படுத்தாமல், மத்திய அரசு மீது பழியை போடுகிறார்.
'ஆந்திராவை மேம்படுத்துவேன்' என, வாக்குறுதி அளித்த சந்திரபாபு நாயுடு, இப்போது தன் மகன் லோகேஷ் வளர்ச்சிக்காக, ஆந்திராவை கொள்ளையடிக்கிறார். அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தனிநபர் தாக்குதல்!பிரதமர் மோடி, நேர்மையான அரசியல் செய்வதற்கு பதிலாக, தனிநபர் தாக்குதல் நடத்துகிறார். இப்போது அவர், என்னை போன்றவர்களை தரக்குறைவாக பேசலாம்; நாளை, இதேபோன்ற தனிநபர் தாக்குதலை, அவரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சந்திரபாபு நாயுடுஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்கருப்பு கொடிஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரத்தில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் விலகியது. இதன்பின், பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு நேற்று, முதல் முறையாக சென்றார். பிரதமரை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி சார்பில், கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அட்சயபாத்திரம் திட்டம்உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனில், சந்திரோதய கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான, 'இஸ்கான்' சார்பில், பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உணவு அளிக்கும், 'அட்சய பாத்திரம்' திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201908:45:37 IST Report Abuse
Srinivasan Kannaiya உங்ககூட கூடிக்குலாவிய பொழுது இது தெரியாதா
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
14-பிப்-201908:44:45 IST Report Abuse
Anandan இதையெல்லாம் கூட்டணி வைக்கும் பொழுது சொல்லணும். உங்களோடு கூட்டணியில் இருந்தால் நல்லவர் இல்லைனா இப்படி புறம் பேசுறது. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
13-பிப்-201908:39:17 IST Report Abuse
ரத்தினம் அவர் சொல்லுவது அப்பட்டமான உண்மை. வளர்த்து விட்ட மாமனாரையே கீழே தள்ளி ஆட்சிக்கு வந்தவர் பெத்த அப்பனை சிறையில் போட்டது மாதிரி இன்னொரு அவுரங்கசீப் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X