ஆப்கனில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் : தலீபான் தளபதி உள்பட 6 பேர் பலி

Added : பிப் 10, 2019
Share
Advertisement

கஜினி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் காராபாக் மாவட்டத்தின் ஜமால் கில் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். இதையடுத்து அந்த இடத்தில் மீது பாதுகாப்பு படைகள் வான்தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பற்றி மாகாண அரசு செய்தி தொடர்பாளர் ஆரிப் துாரி கூறும்போது, “வான்தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி ரபியுல்லா மிகவும் கொடூரமானவர். அவர் கொல்லப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியில் இனி பாதுகாப்பு நிலை மேம்படும்” என குறிப்பிட்டார். இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X