இளவரசியின் பிரதமர் ஆசை : பின்வாங்கியது தாய்லாந்து கட்சி| Dinamalar

இளவரசியின் பிரதமர் ஆசை : பின்வாங்கியது தாய்லாந்து கட்சி

Added : பிப் 10, 2019
Share

பாங்காக்: தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கோனின் கோபத்தால் ,இளவரசி உபலோத்னா ராஜகன்யா சிரிவத்னாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்த தாய் ரக்சா சார்ட் கட்சி தற்போது அந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது.தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி பட்டத்தை துறந்த உபலோத்னா ராஜகன்யா சிரிவத்னா அரசியலில் பிரதமர் பதவிக்கு தாய் ரக்சா சார்ட் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.அதற்கு , "அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்," என்று மன்னர் வஜ்ராலங்கோன் நேற்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் உபலோத்னா ராஜகன்யா சிரிவத்னாவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்போவதாக அறிவித்திருந்த கட்சி தற்போது பின்வாங்கியுள்ளது.

அவரை வேட்பாளராக அறிவித்திருந்த தாய் ரக்சா சார்ட் கட்சி, "மன்னருக்கும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விஸ்வாசத்துடன் இருந்து, மன்னரின் கட்டளைக்கு கட்டுப்படுவதாக" அறிவித்துள்ளது. இது குறித்து இளவரசி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X