மெக்சிகோ உணவு விடுதியில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Added : பிப் 10, 2019
Advertisement

மெக்சிகோசிட்டி: மெக்சிகோவில் நட்சத்திர உணவு விடுதியில் பத்திரிகையாளர் ஒருவரை காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மெக்சிகோ டபாஸ்கோ மாகாணம் மிலியானா சபாதா நகரத்தில் நட்சத்திர உணவு விடுதியில் காரில் வந்த சிலர் உணவு விடுதிக்குள் நுழைந்து திடீரென அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஜீசஸ் ராமோஸ் ரோட்ரிக்ஸை எட்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.ரோட்ரிக்ஸ் உள்ளூர் எப்.எம். பத்திரிகையாளர். கடந்த 10 ஆண்டுகளாக அந்த வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.கடந்த ஒரு வாரத்திற்கு முன் பாஜா கலிபோர்னியா சர் மாகாணத்தில் சமுதாய வானொலி இயக்குநர் ஒருவர் கொலை செய்யப்பட்டடார். பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மெக்சிகோ அரசாங்கம் பாதுகாப்பு அளித்து வந்த நிலையிலும் இக்கொலை குறித்து அதிர்ச்சி உருவானது.அதேபோல மற்றொரு பத்திரிகையாளர் ரபேல் மியூருயா, அவரது செய்திகளுக்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பிறகு அவரது உடல் ஒரு சாக்கடைக் கால்வாயிலிருந்து ஜன.20 அன்று கண்டெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X