அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தலுக்காக போராட்டம்
ஸ்டாலின் எச்சரிக்கை

ஓசூர்: ''லோக்சபா தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கா விட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்


கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் அவர் பேசியதாவது: பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல்

நடத்தியிருக்க வேண்டும். 15 மாதங்களாகியும் நடத்தவில்லை. 'முதல்வரை மாற்ற வேண்டும்' என கவர்னரிடம் மனு கொடுத்ததால் எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. முதல்வருக்கு எதிராக ஓட்டளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரின் பதவி மட்டும் பறிக்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் 11 பேரின் பதவி பறிக்கப்பட்டதாகத் தான் தீர்ப்பு வரும். அப்போது இந்த ஆட்சி கவிழும். பா.ஜ.விடம் '21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேண்டாம். ஏனெனில் நாங்கள் டிபாசிட் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளோம். இருக்கும் வரை அனுபவித்து விடுகிறோம். இதற்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி

Advertisement

வைத்து கொள்கிறோம்' என அ.தி.மு.க.வினர் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கா விட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இவ்வாறு பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
11-பிப்-201915:05:07 IST Report Abuse

R S GOPHALAஇடை தேர்தலா பப்பு ? உனக்கு இனிமேல் இறுதி தேர்தல்தான்... ஒரேயடியாக ஆப்பு அடிக்க போகிறார்கள். ஜாக்கிரதை.

Rate this:
மெய்கண்டான் - Chennai,இந்தியா
11-பிப்-201914:48:05 IST Report Abuse

மெய்கண்டான்சுடலை, இடைத்தேர்தல் வேண்டாம் என்று நீங்க மனு கொடுததில்லையா?

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
11-பிப்-201911:26:49 IST Report Abuse

Kalyani Sதேர்தலைக்கண்டு திமுக பயப்படுகிறது என்று கூறிவருபவர்களுக்கு ஸ்டாலினின் இந்த கோரிக்கை வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X