பதிவு செய்த நாள் :
புனித நீராடுவதை
புகைப்படம் எடுக்க தடை

பிரயாக்ராஜ்: கும்பமேளாவில், மக்கள் புனித நீராடும் பகுதிகளில் புகைப்படம் எடுக்க, அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரயாக்ராஜ்,கும்பமேளா,புனித நீராடுவதை,புகைப்படம்,தடை


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சேரும், திரிவேணி சங்கமத்தில், கும்பமேளா நடந்து வருகிறது.

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அசீம் குமார் ராய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கும்பமேளாவில் புனித நீராடுவது,

மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஆனால் பலர், நீராடுவதை புகைப்படம் எடுக்கின்றனர். பத்திரிகைகள் மற்றும் 'டிவி சேனல்கள்' வி.ஐ.பி.,க்கள் நீராடு வதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வெளியிடுகின்றன.

திரிவேணி சங்கமத்தில், 2013ல் கும்பமேளா நடந்தது. அப்போது, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'கலாசாரமும், நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும். 'அதனால், குளிப்பதை புகைப்படம் எடுப்பது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. நீராடும் பகுதிகளில் புகைப் படம் எடுக்கப்படுவதை, கும்பமேளா நிர்வாக கமிட்டி தடுக்க வேண்டும்' என, கூறியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை, கும்பமேளா நிர்வாக கமிட்டி செயல்படுத்தவில்லை. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கும்பமேளாவில், மக்கள் நீராடும் பகுதிகளைச் சுற்றி, 100 மீட்டர் துாரம் வரை, பத்திரிகைகள், 'டிவி சேனல்கள்' உட்பட யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க,

Advertisement

கும்பமேளா நிர்வாக கமிட்டி அனுமதிக்க கூடாது. இதை மீறுவோர், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இவ்வாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கும்பமேளாவை ஒட்டி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியில், 30 கிலோ எடை உடைய, தென்னங்கன்று, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. உலகிலேயே, இதுதான் மிகப்பெரிய தென்னங்கன்று விதையாக கருதப்படுகிறது என, உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த மரம், 1,000 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என்றும் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201912:26:22 IST Report Abuse

pattikkaattaan செல்பி எடுக்கலாமுங்களா.. ஜட்ஜ் ஐயா ...

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201909:53:36 IST Report Abuse

R.PERUMALRAJA" கலாசாரமும், நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும் " - அலகாபாத் நீதி மன்றம் .......எந்த அடிப்படையில் கேரளா ஐயப்பன் கோவிலை விமர்சனம் செய்தது நீதிமன்றம் ? ....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201908:59:47 IST Report Abuse

Srinivasan Kannaiyaநல்ல மனம் உள்ளவர்கள் மிகவும் சொற்பம்

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X