'ஜன்தன்' கணக்கு டிபாசிட் ரூ.90 ஆயிரம் கோடி! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஜன்தன்' கணக்கு டிபாசிட்
ரூ.90 ஆயிரம் கோடி!

புதுடில்லி: 'நாடு முழுவதும், 'ஜன்தன்' கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ள தொகை, 90 ஆயிரம் கோடி ரூபாயை எட்ட உள்ளது' என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜன்தன்,கணக்கு,டிபாசிட்,ரூ.90 ஆயிரம் கோடி!


ஏழை, எளிய மக்களும், வங்கிகளில் கணக்கு துவக்கும் வகையில், மத்திய அரசு, 2014ல், ஜன்தன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

34 கோடி:


'ஆதார்' மட்டும் இருந்தால் போதும், வங்கி கணக்கு துவங்கி விடலாம், வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ், இப்போது, 34 கோடி பேர், வங்கி கணக்கு வைத்துள்ளனர். இதற்கிடையில், 2018 ஆகஸ்ட், 28க்கு பின், கணக்கு துவக்கியவர்களுக்கு, விபத்து காப்பீடு தொகையை, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது. இதனால், ஜன்தன் திட்டத்தின் கீழ், பலர் புதிதாக கணக்கு துவக்கினர். இதையடுத்து, ஜன்தன் கணக்குகளில் டிபாசிட் செய்யப்படும் தொகையும் அதிகரித்தது.

53 சதவீதம்:


இந்த ஆண்டு, ஜன., 30வரை, ஜன்தன் கணக்குகளில், 89 ஆயிரத்து, 257 கோடி ரூபாய்

Advertisement

டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச், 31க்குள், இந்த தொகை, 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. 'ஜன்தன் கணக்கு வைத்திருப்போரில், 53 சதவீதம் பேர் பெண்கள்; 59 சதவீத கணக்குகள், கிராமப்புறத்தை சேர்ந்தவை' என, நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
11-பிப்-201918:13:34 IST Report Abuse

ganapati sbமுப்பது கோடி ஏழை மக்கள் 90 ஆயிரம் கோடி சேமிப்பு என்றால் சராசரியாக 3000 ரூபாய் சேமிப்பு நல்ல முன்னேற்றம் மத்திய அரசின் விவசாயிக்கான 6000 மாநில அரசின் நலிந்தோர்க்கான 2000 கிடைத்தால் ஆண்டுக்கு 11000 என சேமிப்பு உயரும் பாராட்டுக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் விவசாய கூலி தொழிலாளி பெரும் பென்ஷன் 3000 12 சேர்ந்தால் 47000 ஆண்டு சேமிப்பு . அருமை . இரண்டு வருடத்தில் சிலர் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள் .

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-பிப்-201918:06:27 IST Report Abuse

Pugazh Vஏழை எளிய மக்கள் தான் 90 ஆயிரம் கோடி வங்கியில் போட்டார்களா? வங்கியில் இத்தனை பணத்தை போட்டு வைக்க முடிகிறவர் ஏழையா? அன்றாடத் தேவைகளுக்கு ???

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201909:58:18 IST Report Abuse

pattikkaattaan பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நிறைய பேர் அதில் கருப்பு பணத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டுகள் வந்ததே ... அது என்னவாயிற்று ?

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X