அனைவருக்கும் சமையல், 'காஸ்'; மத்திய அமைச்சர் பிரதான் உறுதி Dinamalar
பதிவு செய்த நாள் :
அனைவருக்கும் சமையல், 'காஸ்'
மத்திய அமைச்சர் பிரதான் உறுதி

கிரேட்டர் நொய்டா: ''அனைத்து குடும்பங்களுக்கும் சமையல், 'காஸ்' இணைப்பு வழங்கும் முயற்சி, வெகு விரைவில் நிறைவேறும்,'' என, மத்திய பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லியை அடுத்துள்ள, உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், பெட்ரோலிய தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கம் நடக்கிறது.

90 சதவீதம்:


இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பெட்ரோலிய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, தர்மேந்திர பிரதான் பேசியதாவது: பா.ஜ., அரசு, 2014ல், பதவியேற்றபோது, சமையல், காஸ் இணைப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, 55 சதவீதமாக இருந்தது. தற்போது, 90 சதவீதமாக உயர்ந்து உள்ளது. கடந்த, 55 மாதங்களில்

மட்டும், 40 சதவீத மக்களுக்கு சமையல், காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும்,சமையல்,காஸ்,மத்திய அமைச்சர்,பிரதான்,உறுதி

'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற, ஏழை, எளிய குடும்பங்களுக்கு, பெண்களின் பெயரில், இலவச சமையல், காஸ் இணைப்பு வழங்கும் திட்டம், 2016ல் துவக்கப்பட்டது. இதுவரை, 6.4 கோடி குடும்பங்களுக்கு சமையல், காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும், 2020, மார்சுக்குள், இது, எட்டு கோடியாக உயரும்.

கிராமங்களில், விறகு போன்ற பொருட்களை சமையல் செய்வதற்கு எரிபொருளாக

Advertisement

பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கிறது.

நம்பிக்கை:


காற்று மாசுவை குறைக்கும் வகையிலும், மக்களின் சுகாதாரத்தை கருத்தில் வைத்தும், அனைத்து குடும்பங்களுக்கும் சமையல், காஸ் இணைப்பு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இலக்கை மிக விரைவில் எட்டுவோம் என்ற, முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-பிப்-201917:12:56 IST Report Abuse

Pugazh V"'இலவச சமையல், காஸ் இணைப்பு வழங்கும் திட்டம், 2016ல் துவக்கப்பட்டது.""/ இந்த வரியை அனைத்து வாசகர்களும் மீண்டும் மீண்டும் படிக்கவும். இனியாவது, பிற கட்சி ஆளும் மாநிலங்களில்"இலவச திட்டங்கள்' வரும் போது, " மக்களை திராவிடால்ஸ் பி.காரர்கள் ஆக்குகிறது" என்ற பிலாக்கணத்தைப் பாடாதீர்கள். வாசகர்கள் தகவலுக்கு. //நன்றி.

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201910:14:50 IST Report Abuse

pattikkaattaan வீட்டு சமையல் உருளைக்கு எவ்வளவு சவிகித வரி?.. முந்தய காங்கிரஸ் அரசின்போது ஒரு உருளையின் விலை என்ன ?.. இப்போது விலை குறைவா, அதிகமா ?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201908:52:40 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதெல்லாம் உடுப்பா... பழைய படி விறகு அடுப்பு கொண்டுவாப்பா... விறகு கொடுப்பா... அப்பதான் மரம் வளர்ப்பீங்க ..........................

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X