எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.2 கோடி!
தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி;
எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,

லோக்சபா தேர்தல் செலவுக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், தலா, 2 கோடி ரூபாய் வசூலிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

MLA,D.M.K,DMK,எம்.எல்.ஏ.,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்து பணிகளும், ஸ்டாலின் தலைமையில் நடந்தன. அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெறவில்லை.

குற்றச்சாட்டு:


இதற்கு காரணம், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களுக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டது தான் என, தி.மு.க.,வினரே குற்றம் சாட்டினர். ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார். அவர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க, கட்சியினரும், சொந்த பணத்தை செலவழிப்பர்.

உண்மையாக, தேர்தல் வேலை செய்தவர்களின் விபரத்தை, ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக பெற்று, அவர்களுக்கு, வாரிய தலைவர், மாவட்ட செயலர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகளை வழங்குவார். அதே, 'பார்முலா'வை வரும் லோக்சபா தேர்தலில் பின்பற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், சிலவற்றில், அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, கட்சியில் நீண்ட காலமாக உள்ள, உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.

விருப்பம்:


இது போன்றவர்கள், பெரும்பாலும் பணபலம் இல்லாதவராக இருப்பதால், அவர்களுக்கான தேர்தல் செலவை, கட்சியே ஏற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அதற்காக, தற்போது பதவியில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், தி.மு.க.,வினருடன் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், அரசு ஒப்பந்த பணிகள், மது கடை பார் உரிமம் எடுப்பது என, அனைத்திலும் ஆளுங்கட்சியினர் தான் ஆதிக்கம் செலுத்துவர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி வளர்ச்சி நிதி கூட, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாது. ஜெயலலிதா மறைவால், தற்போது, ஆளுங்கட்சியினருடன்,

Advertisement

தி.மு.க.,வினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர். அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.

முடிவு:


இதனால், தி.மு.க., ஆட்சி நடப்பது போன்ற உணர்வில் தான், அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கும் தெரியும் என்பதால், லோக்சபா தேர்தல் செலவை, அவர்கள் தலையில் சுமத்த, முடிவு செய்துள்ளது. அதன் துவக்கமாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும், தலா, 2 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக வசூலிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:49:29 IST Report Abuse

meenakshisundaramஆரம்பிச்சுட்டார்யா அப்பன் வழியை .

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
12-பிப்-201916:08:35 IST Report Abuse

ரத்தினம்திமுக ஒரு ரவுடி கட்சி அது மட்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

Rate this:
மெய்கண்டான் - Chennai,இந்தியா
11-பிப்-201919:00:11 IST Report Abuse

மெய்கண்டான்ஊழல் அற்ற ஆட்சியின் லட்சணம் தெரிகிறதா மக்களே...?

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X