கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜீவா நகர் ஆக்கிரமிப்பு பிரச்னை:ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement

கோவை, கவுண்டம்பாளையம் ஜீவா நகர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கவுண்டம்பாளையத்தில், வண்டிப்பாதைக்குரிய இடத்தை ஆக்கிரமித்து, 203 வீடுகள் கட்டப்பட்டு, ஜீவா நகர் என, பெயரிடப்பட்டிருந்தது. அதனால், 50 அடி ரோடு, 10 அடியாக சுருங்கியது.இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 'மாற்று இடம் வழங்கி விட்டு, ஆக்கிரமிப்பை அகற்றலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் வழங்கியும், அப்பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. கோர்ட் உத்தரவுப்படி, மாற்று வீடு வழங்க, பயனாளிகள் பட்டியலை மாநகராட்சி தயாரித்து, குடிசை மாற்று வாரியம் வசம் ஒப்படைத்தது.அத்துறையும், வீடு ஒதுக்கி, டோக்கன் வழங்கியது. ஒரு தரப்பினர், வீடுகளை காலி செய்து விட்டு, குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். இன்னொரு பிரிவினர், வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்தனர்.தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை, வீடுகளை இடிக்கக்கூடாது என, மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.அதனால், ஜீவா நகர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால், மேட்டுப்பாளையம் ரோட்டுக்கும், தடாகம் ரோட்டுக்கும் இணைப்பு கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
11-பிப்-201918:54:44 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj கோவை நகராட்சியின் பார்வையெல்லாம் விதிகளுக்கு உட்பட்டு தைரியமாக செயல்படும்போது காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் காஞ்சிபுரம் பஞ்சாயத்து மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றது ஏழைகளுக்கு மாற்று இடம் அளிக்காது ஆக்கிரமிப்பு செய்துள்ள பணக்காரர்கள் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்களை காப்பாற்றிட கப்பம் பெற்று விதிகளை ஏப்பம் இடுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201918:01:07 IST Report Abuse
Bhaskaran ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயவுதாட்சன்யம் கூடாது நகரங்களின் முக்கியமான பகுதிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புக்காரர்களினால்தான் பிரச்னை அரசின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை இவர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
11-பிப்-201902:57:26 IST Report Abuse
.Dr.A.Joseph இதுபோல தமிழகம் முழுவதும் செய்தால் போக்குவரத்து,நீர் நிலை வாய்க்கால்கள் மேம்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X