பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் நிழற்குடை அமைக்க கோரிக்கை

Added : பிப் 11, 2019
Advertisement

சென்னை:அண்ணா சாலையில் உள்ள, 'ஸ்பென்சர்' பேருந்து நிறுத்ததில், இரண்டு நிழற்குடை மட்டுமே இருப்பதால், கூடுதல் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அண்ணா சாலையில், ஸ்பென்சர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில், ஏராளமான வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள் உள்ளன. இந்த நிறுத்தத்தை, தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு, 2017ல், இரண்டு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அதிகளவிலான பயணியர் வருகையால், இங்குள்ள இரண்டு நிழற்குடை போதுமாதாக இல்லை. இதனால், காலை, மாலையில் இங்கு பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், வெயிலில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.இங்குள்ள நிழற்குடையின் கூரை, மிக உயரமாகவும், அகலம் குறைவாகவும் இருப்பதால், மழை, வெயிலுக்கு எந்த பாதுகாப்பையும் தருவதில்லை. தற்போது உள்ள நிழற்குடையின் மேற்கூரையை அகலமாக மாற்றி அமைப்பதோடு, கூடுதல் நிழற்குடையும் அமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X