மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (6)
Advertisement
மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

ராமநாதபுரம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ராமநாதபுரம், பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர், கொத்தனார் ராமதாஸ், 55. இவரது மகன் விக்னேஷ்வரன், 21; டிப்ளமோ சிவில் படித்துள்ளார். 2ம் தேதி, பட்டணம்காத்தான் பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் விக்னேஷ்வரன் சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி, தலையில் காயமடைந்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, ஆறு நாட்களாக, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராமதாஸ், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். மருத்துவமனை நிர்வாகம், விக்னேஷ்வரனின் இதயம், கண், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை எடுத்து, ஆறு நபர்களுக்கு தானமாக வழங்க, ஏற்பாடு செய்தது. படிப்பறிவு இல்லாத நிலையிலும், உயிருக்கு போராடும் ஆறு பேரை காப்பாற்றிய ராமதாசை, அனைவரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
12-பிப்-201912:25:43 IST Report Abuse
MaRan சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டும்,, மூளை சாவு என்பது செயற்கையாகவும் ஏற்படுத்தப்படலாம்,, எனவே மூளைச்சாவு என்று அறிவித்தபின் அதை உறுதி செய்ய அரசு மருத்துவ குழு முன்வரவேண்டும்,,
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
11-பிப்-201921:15:52 IST Report Abuse
ganapathy முதலில் இந்த விபத்தை தவிர்க்க ஹெல்மெட் அணிதல் மிதமான வேகம். Signal விதிகள் மற்றும் சாலை விதிகளை மதித்து வண்டி ஒட்டகற்று கொள்ளணும். அப்பறம் உடல் உறுப்பை தானம் பண்ணலாம்.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
11-பிப்-201913:56:53 IST Report Abuse
raghavan மூளைச்சாவு விஷயத்தில் மதுரை மருத்துவமனை பெயர் அடிக்கடி வருகிறது, எல்லாம் அந்த மதுரை மீனாக்ஷிக்குத்தான் புரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X