பொது செய்தி

தமிழ்நாடு

'மின்மய தொழில்நுட்பம் அவசியம்'

Added : பிப் 11, 2019
Advertisement

சென்னை:''மருத்துவ மாணவர்களுக்கு, முப்பரிமான, மின்மய தொழில்நுட்பம் அவசியம்,'' என, ராமச்சந்திரா மருத்துவ பல்கலை துணைவேந்தர், விஜயராகவன் பேசினார்.சென்னை, போரூர், ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், உடற்கூறியியல் பன்னாட்டு மாநாடு, சமீபத்தில் நடந்தது. மாநாட்டை, பல்கலை துணைவேந்தர் விஜயராகவன், துவக்கி வைத்து பேசியதாவது:நாட்டில், 491 மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற, தேவையான சடலங்கள் கிடைப்பதில்லை. தற்போது ராமச்சந்திராவில், அதிநவீன சடலங்கள் ஆய்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.இதில், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பார்மலின் ரசாயன பொருளை பயன்படுத்தாமல், பலமுறை அறுவை சிகிச்சை பயிலரங்குகளில் பயன்படுத்தி, பதப்படுத்தி வைக்க முடியும்.மேலும், 'செக்ரா' என்ற முப்பரிமாண மின்மய தொழில்நுட்ப கருவி வாயிலாக, கணினியில் சடலங்களை, அறுவை சிகிச்சை செய்வது போல், மாணவர்கள் பயிற்சி பெற முடியும். இவை, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் அவசியமாகிறது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், உடற்கூறியியல் துறை தலைவர் விஜயசாகர், டாக்டர்கள் குணபிரியா ரகுநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X