பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீது விவாதம்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement
சட்டசபை,Budget,பட்ஜெட்,விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதம், இன்று(பிப்.,11) துவங்க உள்ளது.

தமிழக சட்டசபையில், 2019 - 20ம் நிதியாண்டுக் கான பட்ஜெட், பிப்., 8ல், தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபை கூடுகிறது. இன்று முதல், 13ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.





ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில், எம்.எல்.ஏ.,க்கள் பட்ஜெட் விவாதத்தில் பேசுவர். எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளிப்பர். கூட்டத்தின் கடைசி நாளான, 14ம் தேதி, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம், விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்.

லோக்சபா தேர்தல் வர உள்ளதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, கடன் சுமை அதிகரிப்பு, குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம் என, பல்வேறு மக்கள் பிரச்னைகளை, ஆவேசமாக எழுப்புவர். எனவே, சட்டசபையில், பட்ஜெட் விவாதத்தில் அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவசாயி - Tiruppur,இந்தியா
11-பிப்-201908:40:36 IST Report Abuse
விவசாயி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே கருத்து சொல்லும் மதுரையாரே நீங்கள் அஇஅதிமுக எதிரியா? திமுக அனுதாபியா?..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201908:16:39 IST Report Abuse
Srinivasan Kannaiya அன்றைய காலத்தில் வாள் கேடயம் வைத்து சமர் புரிந்தார்கள்... இப்போ வாயால் ,கைகளால். மைக் செட்டுகளால் சமர் புரிகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201908:14:52 IST Report Abuse
Srinivasan Kannaiya விவாதம் எங்கே பக்கவாதம் தான் ...முடங்கி போகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X