10 நாட்களாக கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பாதிப்பால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10 நாட்களாக கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பாதிப்பால் அவதி

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சைதாப்பேட்டை:குழாய் உடைப்பு மற்றும் அடைப்பு காரணமாக, சைதாப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னை அதிகரித்து, பகுதிமக்கள், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அடையாறு மண்டலம், 171வது வார்டு, சைதாப்பேட்டை, வெங்கடாபுரம் பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட, குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன.ஒவ்வொரு, பிளாக் இடையே, 4 அடி அகலத்தில், காலி இடம் உள்ளது. அதன் வழியாக, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.பத்து நாட்களாக, குழாய் உடைந்து மற்றும் அடைப்பு ஏற்பட்டு, காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதோடு, பிளாஸ்டிக் குப்பை சேர்ந்துள்ளதால், சுகாதார பாதிப்பு அதிகரித்துள்ளது.மேலும், நாள் கணக்கில் கழிவுநீர் தேங்கி உள்ளதால், குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால், குடிநீர் மாசடைந்து, தொற்றுநோய் பரவி உள்ளது.ஒரு வாரத்தில், 10க்கும் மேற்பட்டோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:கழிவுநீர் குழாய் உடைப்பால், தினசரி பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம். குடிநீரும் மாசடைந்து விட்டது. குப்பையை அகற்ற, ஊழியர்கள் வருவதில்லை.தினம் ஒரு நபர் வீதம், மர்ம காய்ச்சல் பாதிக்கிறது. மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த பயனும் இல்லை. கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
11-பிப்-201917:40:07 IST Report Abuse
r.sundaram எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை இல்லை. (திருநெல்வேலி மகாராஜ நகர் பகுதி). முதல் கட்ட பணிகள் நிறைவடைந்ததாக தெரிகிறது. அனால் திட்டம் தோல்வி என்கிறார்கள், விஷயமறிந்தவர்கள். இரண்டாவது கட்டத்திலும் எங்கள் பகுதி இடம்பெற வில்லை. இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பித்ததா என்று தெரிய வில்லை. மூன்றாம் கட்டம் எப்போது ஆரம்பிப்பார்கள் என்று தெரிய வில்லை. புதிது புதிதாக குடியிருப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. மாநகராட்சி பூங்கா கட்டுவதில் காட்டும் அக்கறையை பாதாள சாக்கடை திட்டத்தில் காட்டினால் நல்லது. புதிய குடியிருப்பு மக்கள் திறந்த சாக்கடைகூட இல்லாமல், வீட்டின் குளிநீர், அடுக்களை கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவு ஆகிய எல்லா கழிவு நீரையும் தங்கள் பிளாட் பரப்பிலே வெளியேற்றுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது . சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வந்த புது காலனிகளுக்கே இன்னும் பாதாள சாக்கடை அல்லது திறந்த சாலையோர சாக்கடைகள் ஏற்படுத்தப்பட வில்லை. எப்போது செய்வார்கள் தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீரை வெளியேற்ற தனியாக கட்டுமானம் செய்யும்போது அதற்க்கு என்று ஐம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. மக்கள் கட்டிய டெபாசிட் பணம் மாநகராட்சியிடம் உள்ளது. அனால் வேலைதான் நடக்க வில்லை. அந்த ஆண்டவனின் கருணை பார்வை எங்கள் மேல் எப்போது விழுமோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X