பொது செய்தி

தமிழ்நாடு

ஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (25)
Advertisement
Metro,Metro rail,மெட்ரோ,மெட்ரோ ரயில்

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பெரிய நிலையமாகவும், இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நிலையமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது. நிலைய பிளாட்பார ஏரியா, 32 மீட்டர் அகலத்திலும், பயணியர் நடமாடும் முகப்பு பகுதிகளில், 40 மீட்டர் அகலத்திலும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில், முதல் தளத்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அடுத்த இரண்டு தளங்களில், எட்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1, 2, 3 மற்றும் 4வது நடைமேடைகளில் இருந்து, பரங்கிமலைக்கும், 5வது நடை மேடையில் இருந்து, விமான நிலையத்துக்கும், 6 மற்றும் 8வது நடைமேடைகளில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

7வது நடைமேடை, அவசரத்துக்கு ரயில் நிறத்தி வைக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சென்ட்ரலும், ஆலந்துார் நிலையமும், ரயில்கள் இருவழிகளில் கடந்து செல்லும் நிலையங்களாக உள்ளன. இந்நிலையங்களில், பயணியருக்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுவதற்கு, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-பிப்-201911:11:54 IST Report Abuse
JeevaKiran இதில் எந்த நடைமேடையிலிருந்து மவுண்ட் ரோடு & CMBT வழியாக ரயில் போகிறது என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Achchu - Chennai,இந்தியா
17-பிப்-201910:20:35 IST Report Abuse
Achchuதற்போதைக்கு நடைமேடைகள் 1 மற்றும் 2 விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியே சென்ட்ரல் வண்ணாரப்பேட்டை வழித் தடத்தில் இயங்கும் ரயில்களும், நடைமேடைகள் 5 மற்றும் 6 சென்ட்ரலிருந்து எழும்பூர் அண்ணா நகர் CMBT ஆலந்தூர் வழியே பரங்கிமலை வரையிலும் செல்லும் ரயில்களும் இயங்குகின்றன...
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
13-பிப்-201903:12:21 IST Report Abuse
Murugan இங்கு எல்லாம் ரயிலில் பயணம் செய்யும்போது நம் நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என நண்பர்கள் பேசிக்கொள்வோம். இதை கண்டவுடன் மிகவும் ஒரு இந்தியனாக பெருமை கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
11-பிப்-201917:10:06 IST Report Abuse
தமிழர்நீதி ஜப்பான் கடனில் , சேரிகளை அகற்றாமல் ஓடும் ரயிலுக்கு இணையாக இன்னொரு ரயில் விடுகிறார்கள் .உலகின் அதிகம் குடிசை பகுதிகள் உள்ள சென்னை , இந்த அதிசயத்தை பார்த்து மலைத்து நிற்கிறது .
Rate this:
Share this comment
Kannan - madras,இந்தியா
12-பிப்-201901:55:38 IST Report Abuse
Kannanஆமாம். திருட்டு ரயில் குடும்பம் ஆட்சியின் சொத்து இந்த சேரிகள்...
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
12-பிப்-201909:52:39 IST Report Abuse
TamilArasanசீ இது போன்ற கேவலநீதி களுடன் வாழ எங்களுக்கு அசிங்கமாக உள்ளது... அட அற்பனே திருட்டு ரயில் குடும்பம் தமிழகத்தை ஆட்டை போட்டுள்ள சொத்தை வைத்து மொத்த தமிழகத்திலுள்ள குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும் மாட மாளிகை கட்டி கொடுத்துவிடலாம், உலகே மலைக்கும் அளவிற்கு சொத்து குவித்துள்ளார்கள்..?? ஜப்பானிடம் கடன் வாங்கி கட்டப்படும் இந்த அடிப்படை கட்டமைப்பு வசதி இன்னும் 100 ஆண்டுகளுக்கு சென்னை வாசிகளுக்கு பயன் பெரும்- ஆனால் ஊர் பணத்தை ஆட்டை போட்டு சேர்த்துள்ள சன் டிவி, ஸ்பைஸ் ஜெட் விமானம் மேலும் தமிழகம் மற்றும் பல மாநிலம், நாடுகளில் கழக கண்மணிகள் சேர்த்துள்ள திருட்டு சொத்துக்கள் அவர்கள் வாரிசுகளுக்கு மட்டுமே பயன் பெரும்......
Rate this:
Share this comment
Achchu - Chennai,இந்தியா
17-பிப்-201910:28:17 IST Report Abuse
Achchuவள்ளல்கள் ஆட்சிக்காலத்தில் ஜப்பானிடம் கடன் வாங்கியாவது இந்த திட்டத்தைக் கொண்டு வரவில்லை கம்யூனிஸ்ட்டுகள் 1984 லிலேயே கொல்கத்தாவில் மெட்ரோவைக் கொண்டு வந்து இயக்கினார்கள் என்ற செய்தி தெரியுமா? இன்று ப்ரமாணடமாய் இயங்கி கொண்டுள்ளதையும் ஒரு நடை போய் அதன் கட்டணங்கள் என்ன என்பதையும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
18-பிப்-201907:38:01 IST Report Abuse
Anandan//ஆமாம். திருட்டு ரயில் குடும்பம் ஆட்சியின் சொத்து இந்த சேரிகள்...// அட முட்டாளே, தமிழகத்தை அதிக காலம் ஆண்டது அதிமுகத்தான். இந்த குடிசைகள் என்ன திமுக ஆட்சியில் முளைத்ததா? ஏன் மத்த மாநிலங்களில் சேரிகள் கிடையாதா?...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
18-பிப்-201907:39:31 IST Report Abuse
Anandanஏன், ஆத்தாவின் சொத்துகளையும் அவரின் தோழி குடும்ப வகையறாவின் சொத்துகளையும் ஒண்ணுமே செய்ய கூடாதா? ஏன் தேசபக்தியை வித்தியாசமாக போதிக்கும் கட்சியுடன் கூட்டணி என்பதாலா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X