சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.20 லட்சம் செம்மர கட்டை பறிமுதல்

Added : பிப் 11, 2019
Advertisement

சென்னை:சென்ட்ரலில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பார்சல் அலுவலகம் அருகே, செம்மரக்கட்டைகள் அடங்கிய, 12 பார்சல்கள் கிடந்தன. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அதை அங்கேயே வைத்துவிட்டு, கண்காணித்தனர். நேற்று அதிகாலை, செம்மரக்கட்டைகளை எடுக்க வந்தவனிடம், போலீசார் விசாரித்தனர்.அவன், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, தீபன்சிங் என்பதும், அண்ணாநகரில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த கட்டைகளை பறிமுதல் செய்து, தீபன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X