12 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார் சந்திரபாபு நாயுடு

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (46)
Advertisement

புதுடில்லி: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (பிப்.,11) உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளார்.






ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள் , எம்.பி.,க்கள் எம்.எல்சி உறுப்பினர்களுடன் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.


உண்ணாவிரத போராட்டம்

இன்று காலை காந்தி நினைவிடமான ராஜ்கோட்டில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சந்திரபாபு நாயுடு, டில்லி ஆந்திரபவனில் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் தர்ம போராட்ட தீக்ஷா ( நீதிக்கான நீண்ட போராட்டம்) என்ற பெயரில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். பிப் 12 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்த மனு ஒன்றை அளிக்க உள்ளார்.






எதிர்பார்ப்பு

சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


2013 ல் போராட்டம்



முன்னதாக சந்திரபாபு நாயுடு கடந்த 2013-ம் ஆண்டில் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினார். 5 நாள் போராட்டத்தின் போது உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-பிப்-201904:16:27 IST Report Abuse
meenakshisundaram என்னதான் சொல்லுங்க நாய்டு ,நீங்க அந்த தெலுங்கானா ஆளு சந்திர சேகர் ராவ் காரு மாதிரி உண்ணாவிரதம் இருந்தே சாதிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201919:20:26 IST Report Abuse
Bhaskaran Eppadi unnaviratham irupathu enru thalapathiyidam kettu therinthukollalaam avarthanthalku antha anubavam undu avaridam magan antha ragasiyangalai katrukondirupaar
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-201914:32:00 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காலையில் 8 மணிக்கு டிபனை ஒரு பிடி பிடித்துவிட்டு உண்ணாவிரதம் தொடக்கி விடுவார் , இடையில் தண்ணீர் மட்டும் குடித்தால் போதும் , இரவில் 8 மணிக்கு மேல் தடபுடல் விருந்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X