ஜாதியை பற்றி பேசுபவர்களை அடிப்பேன் : கட்காரி

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (51)
Advertisement

புனே : ஜாதியை பற்றிய பேசுபவர்களை தான் அடிக்க போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.





நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எங்களுக்கு ஜாதி மீது நம்பிக்கையில்லை. உங்கள் பகுதிகளில் எத்தனை ஜாதிகள் உள்ளது என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் பக்கம் எந்த ஜாதியும் இல்லை. ஏனெனில் ஜாதியை பற்றி பேசினால் அடிப்பேன் என அனைவரிடமும் நான் சொல்லுவதுண்டு. சமூகத்தில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இன்றி இருக்க வேண்டும்.




சமூகத்தில் ஏழை - பணக்காரர்கள், மேல் ஜாதி - கீழ் ஜாதி என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. ஏழைகளும், தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் கடவுளை போன்றவர்கள். அவர்களுக்காக சேவையாற்ற வேண்டும். அது போன்ற நலிந்தவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை வழங்க வேண்டும். ஏழைக்கு தொண்டாற்றுவது, கடவுளுக்கு செய்யும் சேவைக்கு சமம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
13-பிப்-201912:22:48 IST Report Abuse
Ramamoorthy P இவரே ஒரு டியாபெடிக். பேஷண்ட். அடிப்பேன் உதைப்பேன் என்றா பேசுவது/.
Rate this:
Share this comment
Cancel
Sivan -  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-201907:41:21 IST Report Abuse
Sivan "அடிப்பேன்" என்கிற அதிகாரத்தை உங்களுக்கு தருவது எது? இத்தனை வருடம் சம்பளம் (மக்களாட்சிக்குத் தான்) வாங்கிய பிறகும் அடிப்படை சட்டங்களை கூட படிக்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201920:05:51 IST Report Abuse
தமிழ்வேல் இவரு கொஞ்சநாளா ஏன் தனியா கூவுறாரு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X