டஸல்ட் நிறுவனத்திற்கு சாதகமாகவே ரபேல் ஒப்பந்தம் : ப.சிதம்பரம்| Dinamalar

டஸல்ட் நிறுவனத்திற்கு சாதகமாகவே ரபேல் ஒப்பந்தம் : ப.சிதம்பரம்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (63)
Advertisement

புதுடில்லி : ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் டஸல்ட் நிறுவனத்திற்கு சாதகமாகவே அனைத்து நடைமுறைகளும் கையாளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.



சிதம்பரம் இன்று (பிப்.,11) காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரபேல் ஒப்பந்த புதிருக்கான விடை அரசு நினைத்ததை விட வேகமாக வெளிவருகிறது. ராணுவ தளவாட ஒப்பந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 126 ஐ விட அதிக விலையில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டது டஸல்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட போனஸ். இந்திய பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தை நடத்துகையில் பிரதமர் அலுவலகமும் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தியது குழுவின் மதிப்பை குறைத்துள்ளது. வங்கி உத்திரவாதம் உள்ளிட்ட எந்த உத்திரவாதங்களும் பெறாமல் பெரிய அளவிலான தொகை முன்கூட்டியே அளிக்கப்பட்டுள்ளது.



அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு எந்த அபராதமும் இல்லை,ஏஜென்சி கமிஷனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த கணக்கீடுகளும் இல்லை. டஸல்ட் நிறுவனத்திற்கு சாதகமாக அனைத்து ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டதால் டஸல்ட் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-பிப்-201915:14:04 IST Report Abuse
S.Baliah Seer ஒவ்வொரு ரபேல் விமானத்திற்கும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நாட்டுப்பற்று.
Rate this:
Share this comment
Muruga Vel - Chennai,இந்தியா
12-பிப்-201906:09:18 IST Report Abuse
 Muruga Velஇவர் பெரிய நிபுணர் ..கண்டு புடிச்சிட்டார் .....
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
11-பிப்-201914:56:41 IST Report Abuse
R S GOPHALA நீ பேசாத செதம்பரம். ஒனக்கு ஒரு யோக்கியதையும் கெடையாது. வாய மூடு. ஊழல் பெருச்சாளிகளுக்கு நாட்டு நலன் பத்தி என்ன கவலை இருக்க போகுது...? கொள்ள அடிச்ச சொத்துங்களோட எங்கயாவது வெளிநாட்டுக்கு ஓடி போய்டுங்களேன். இங்க இருந்து எழவு எடுத்தது போதும்.
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-201914:30:14 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அந்த நிறுவனம் விற்கிறது நாம் வாங்குகிறோம் , இது ஒரு வியாபாரம் நமக்கு பொருள் அவர்களுக்கு பணம் , இடையில் உங்களைப்போல இடைத்தரகரை சேர்க்கவில்லை அதை கவனித்திருப்பீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X