ரபேல் விவகாரம் : சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் விவகாரம் : சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி : சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கைத்துறையின் ஆடிட்டர் குழு ரபேல் போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தனது அறிக்கையை மத்திய அரசிடம் இன்று (பிப்.,11) தாக்கல் செய்ய உள்ளது.



ரூ.59,000 கோடி மதிப்புடைய ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ரபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி இன்று தாக்கல் செய்ய உள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



இன்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்ததும், அந்த அறிக்கை ஜனாதிபதிக்கும், நிதியமைச்சகத்திற்கும் பிரதி அனுப்பப்படும். தொடர்ந்து பார்லி.,யில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி, நேரம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த அறிக்கை பொது கணக்குக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது பொது கணக்கு குழுவின் தலைவராக காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hariharan - coimbatore,இந்தியா
11-பிப்-201917:00:38 IST Report Abuse
hariharan C A G is also like judiciary, they have blind rules, they cant interfere in policy decision of govt. they have no measurement of visionary procedures. they will evaluate on basis of spent and received
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
11-பிப்-201915:20:41 IST Report Abuse
Rajavelu E. மோடிக்கு சாதகமாக இருக்கும் ஒரு பொய் அறிக்கை அவ்வளவுதானே.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201915:01:59 IST Report Abuse
தமிழ்வேல் தெரிந்ததுதானே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X