விவசாயிகளுக்கு கல்வி சுற்றுலா அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு கல்வி சுற்றுலா அழைப்பு

Added : பிப் 11, 2019
Share

கரூர்: கல்விச் சுற்றுலாவுக்கு, விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். கரூர் கால்நடை பல்கலை பயிற்சி மைய தலைவர் வசந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: கரூர் வட்டாரத்தை சேர்ந்த, 20 விவசாயிகள் வரும் மார்ச், 4 முதல், 8 வரை, ஐந்து நாட்களுக்கு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு, பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அதில், உள்ளூர் தீவன பொருட்களை கொண்டு, தீவனம் தயாரித்தல் பற்றி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், 04324 294335 என்ற தொலைபேசி எண், 73390-57073 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X