மூளை இல்லாதவர்: பெண் கலெக்டரை வசைபாடிய மார்க்சிஸ்ட் எம்எல்சி

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (32)
Advertisement

திருவனந்தபுரம் : பணியில் இருந்த பெண் சப்-கலெக்டரை, மூளையில்லாதவர் என மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்சி ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் வசைபாடிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

பிரபல சுற்றுலா தலமான இடுக்கி மாவட்டத்தில் சட்ட விரோத கட்டிடங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக்களால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் 2010 ம் ஆண்டு, இடுக்கி மாவட்டத்தில் கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தடையில்லாத சான்றிதழ் பெறுவது அவசியம் என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சப்-கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ்(30). இப்பகுதியில் முதல் பெண் சப்-கலெக்டர் இவர். கோர்ட் உத்தரவை மீறி தேவிக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்சி.,யான ராஜேந்திரன், கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த பணிகளை நிறுத்தும்படி, ரேணு ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது குறித்து ரேணு ராஜூடன் பொதுமக்கள் முன்னிலையில் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு கூடி இருந்தவர்களிடம் பேசிய ராஜேந்திரன், அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இது தான் முதல் முறை. கட்டிட விதிமுறைகளை வகுக்க வேண்டியது பஞ்சாயத்து தான். இவர் இல்லை. விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும். இவர் போன்றோரை நான் இதுவரை பார்த்ததில்லை. இது போன்று மூளை இல்லாதவர்களை இங்கு பணியமர்த்தி உள்ளனர் என்றார்.
எம்எல்சியின் இது கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரேணு ராஜ், கோர்ட் உத்தரவின்படியே நான் நடவடிக்கை எடுத்தேன். அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டுவது கோர்ட் அவமதிப்பு.. இது தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி விட்டேன். எனது கடமையை தொடர்ந்து செய்வேன். அவர்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு கவலையில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201903:21:27 IST Report Abuse
Ganesan Madurai மாடு மேய்க்க வேண்டிய கம்யூனிஸ்ட் முட்டாள் இவன்.
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
12-பிப்-201914:35:56 IST Report Abuse
மூல பத்திரம் யார் சொன்னது முட்டாள்களால் மாடு மேய்க்க முடியும் என்பது. அதற்கும் திறமை வேண்டும் அறிவு வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Sugavanam Krishnamurti - Coimbatore,இந்தியா
11-பிப்-201919:53:31 IST Report Abuse
Sugavanam Krishnamurti எழுதப் படிக்க தெரியாதவனெல்லாம் மந்திரி ஆகும் இந்த நாட்டில், தகுதி அற்ற சட்டம் தெரியாத இம்மாதிரி அறிவிலிகளை செருப்படி கொடுத்து தூக்கு தண்டனை கொடுத்தாலும் தவறில்லை .
Rate this:
Share this comment
Cancel
KSK - Coimbatore,இந்தியா
11-பிப்-201919:13:37 IST Report Abuse
KSK “He may talk like an idiot, and look like an idiot, but don’t let that fool you: he really is an idiot” – Groucho Marx.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X