புதுடில்லி: மோடி பாகிஸ்தானின் பிரதமர் போல் செயல்படுகிறார் என டில்லியில் சந்திரபாபு நாயுடு நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சையான முறையில் பேசியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டில்லி ஆந்திர பவனில் 12 மணி நேர உண்ணாவிரத மற்றும் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழச்சியில் கெஜ்ரிவால் பேசியதாவது: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் நான் முழு ஆர்வத்துடன் இருக்கிறேன். ஆந்திராவை போல் பல மாநிலங்களில் பிரதமர் மோடி எதிர்ப்பு நிலையே கையாண்டு வருகிறார்.
சிபிஐயை கைவசம் வைத்துள்ளார்
சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்கத்திற்கு அனுப்பி சிலரை கைது செய்ய முயற்சித்தது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தை மோடி தரக்குறைவாக நடத்துகிறார். பா.ஜ., அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களை கையாள்வதில் மோடி பாகிஸ்தான் பிரதமர் போல செயல்படுகிறார்.
டில்லியை பாகிஸ்தான் பிடிப்பது போல் மோடி சிபிஐயை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார். பிரதமர் மோடி சி.பி.ஐ., யை தன் கைவசம் வைத்து அவ்வாறு செய்வது சரியல்ல. டில்லி லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளார். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.