சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கை: மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் இருந்து, தென் கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.