பொது செய்தி

இந்தியா

முன்பை விட அதிக நிதி; தம்பிதுரைக்கு கோயல் பதில்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
Thambidurai,தம்பிதுரை,கோயல்,piyush goyal, பதில்

புதுடில்லி : ஜி.எஸ்.டி., மூலம் கிடைக்கும் வரிப்பணத்தை, முன்பை விட அதிகமாக மாநிலங்களுக்கு பகிர்வு செய்வதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.


latest tamil news


லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்.பி.,யும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, ஜி.எஸ்.டி., மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்வதாகவும், தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாவது: ஜி.எஸ்.டி., மூலம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக தம்பிதுரை புரிந்து கொள்ளக் கூடாது. நிதிக்காக மத்திய அரசிடம் மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுதாக கூறுவதும் தவறு. முன்பை விட தற்போது அதிக நிதி பகிர்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-பிப்-201911:57:22 IST Report Abuse
karthik அண்ணாதுரைக்கு பிறகு முதல்வர் தம்பிதுரை ஆகாததற்கு காரணம் இந்த ஓட்டை வாய்தான்
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
12-பிப்-201916:59:07 IST Report Abuse
Karunanஓட்டை வாய்தான் என்று சொல்கிறீர் என்ன தவறாய் பேசிவிட்டார் அவருடைய வார்த்தைகளில் சத்திய ஆவேசம் அல்லவா தெறிக்கிறது...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-பிப்-201910:37:08 IST Report Abuse
J.Isaac அதனால் தான் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட வேண்டிய திட்டங்களுக்கெல்லாம் பிரதமர் வருகிறார் . தேர்தலுக்காக அவசரமாக அடிக்கல் நாட்டுகிற திட்டங்கள் எல்லாம் நாடகமே
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201907:56:17 IST Report Abuse
Srinivasan Kannaiya தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்..... ஆனால் யாராவது ஒரு தற்கால அரசியல்வாதி பிச்சை எடுக்கிறான் என்று சொல்லுங்கள்...? ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X