பொது செய்தி

இந்தியா

மது இல்லாத இந்தியா: நிதீஷ் குமார் விருப்பம்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (38)
Advertisement

பாட்னா : பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்று, நாடு முழுவதற்கும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மது இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.


பீகார் சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது: உத்தரபிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தன்னை மிகவும் பாதித்துவிட்டது. கள்ளச்சாராயம் மற்றும் மது பழக்கத்தினால், ஏழை மற்றும் நடுத்தர வசதி கொண்ட மக்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்கள், தங்களது மாநிலங்களில், மதுவிலக்கை கொண்டுவரும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.


அகிலேஷ் செய்யவில்லை :


பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு முதலே, மதுவிலக்கு அமலில் உள்ளது. இங்கு நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துமாறு 2016ம் ஆண்டே சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பின் உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் இதே கோரிக்கையை தற்போது வைக்கிறேன்.


மோடியிடம் கோரிக்கை :


மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த, மத்திய அரசு உத்தரவிடமுடியாது என்ற போதிலும், பிரதமர் மோடி, பா.ஜ. ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை தடை செய்ய உத்தரவிட வேண்டும். மாநில முதல்வர்கள், தங்களது மாநிலங்களில், மதுவிலக்கை கொண்டுவரும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான், மது இல்லாத இந்தியா உருவாகும் என்று நிதீஷ் குமார் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-பிப்-201906:42:54 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அன்று நான் சின்னவளா இருக்கும் பொழுது வீடுகளில் அரிக்கேன் விளக்கும் காடாவிளக்குலேயும் வசிச்சோம் கரேண்டவந்ததும் குஷியா குதிச்சோம் ஒரு வீட்டுக்கு ஒரு விளக்குத்தான் என்றும் எக்ஸ்டரான்னா 4 அணாக்கட்டி வாங்கலாம்னு சொன்னதால் மாடிக்கு ஒரு விளக்கும் கீழே ஒரு விளக்கும் போட்டாங்க குண்டுவிளக்குதான் 60 வாட்டஸ் நல்ல வெளிச்சமாயிருக்கு விளக்கை சுத்தி உக்காந்து தான் வீட்டுப்பாடம் எழுத்துவதுபடிக்கறதெல்லாம் டியூப் லைட் எல்லாம் பிறகுதான் வந்தன இப்போது எவ்ளோ மாற்றம் இந்தகாலம்போல ரூம்ஸ் எல்லா கிடையாது நாலுகட்டு வீடு எங்கள்வீடு வாசல்திண்ணைக்கு இருமுகல்பிலேகேட்டு இருக்கும் அடுத்து கூடம் தாழ்வாரம் அதுலேயே கிச்சன் சாமி ரூம் மரபலகைகள் போட்டு ஷெல்ப் இருக்கும் சோபா காட்டில் எதுவும் இல்லீங்க பாய்லே படுத்தோம் அப்பாக்கு மட்டும் மாம்பலகையே செய்த மரபெஞ்சு தாழ்வாரமலேயே படுப்போம் முற்றத்துலேந்து காற்று வீசும் வசதிகள் எற எற விடும் மாறியது கள்ளர்பயம் காரணமா முற்றம் தாழ்வாரம் எல்லாம் போயிட்டு பெரிய ஹால் மாடிலேயும் பிரியா ஹால் கல்போலவேதான் காட்டினாங்க அழகான வீடு எல்லாரிடமும் டியூப் லைட்கள் பிரகாசமா இருக்கும் பிறகு விற்றுவிட்டுவந்துட்டோம் சென்னைக்கு இருந்தாலும் குட்டியா இருந்ததுக்காலம் முதல் சிட்டி வாழ்க்கைவந்தும் OLD DAYS ARE GOLDEN DAYS மறக்கவே முடியாது அங்கேயும் அம்மை வந்ததுண்டு மழைக்காய்ச்சலால் அவதிப்பட்டதுண்டு இப்போதுபோல இவ்ளோ எக்ஸ்ரே ஸ்கெனிங் ஒன்னும் இல்லீங்க வாழ்ந்தோம் மேக்சிமம் கைவைத்தியம் பாட்டிவைத்தியம் நாட்டுமருத்தவரிடம் போனோம் பிள்ளைபேறுகூட வீட்டுலதான் சிசேரியன் எல்லாம் இல்லே இயற்கையா பிள்ளைபெறுவாங்க 22னால் பூரான் ஓய்வுக்கு பிறகு வேலைகள் செய்வாங்க அடுத்தபிரசவம் வரை டப்பா பால் கிடையாது வீட்டுல பசு இருக்கும் முதல்ல தாய்ப்பால் தான் அஞ்சுமாசமானால் புழுங்கல் அரிசிவருத்து நொய் எந்திரத்துலே அரைசுச்சுக்கஞ்சி மாசம் ஏறஏற கெட்டியாகும் போல செய்து ஊட்டுவாங்க இடையே பசிச்சால் தாய்ப்பால்தான் குழந்தைகளும் அவ்ளோ ஹெல்தியாகொளுகொளுன்னுஇருக்கும் இப்போதும் குக்கிராமங்களில் இதுவேதான் இருக்கு டப்பா பால் கிடையாது அந்த டப்பாக்களை காலியாக வாங்கி (அதுலே எறும்புபோறாதுன்னு ) வச்சுருப்பாங்க , ஹெல்தியா வாழ்ந்துட்டோம் அந்தப்பழம் தான் இன்றைய பழகிலவாளுக்கு நொய் எதிரிபாக வாழ வலி செய்யறது
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201912:42:44 IST Report Abuse
RM பேரறிஞர் அண்ணா சொன்னது போல் மது அருந்துவதற்கும், குடிப்பதற்கும் உள்ள வித்யாசம் அறியாத நாட்டில் மதுவிலக்கு ?
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
12-பிப்-201911:52:55 IST Report Abuse
chander எல்லாம் ஆண்டு அனுபவிச்சாச்சு பின்ன மது இல்லாத இந்தியா மாது இல்லாத இந்தியா சொல்லதான் தோணும், ஊழல் இல்லாத இந்தியா வேணும் என்று சொல்ல தோணுதா இல்ல நடத்திக்காட்டத்தான் தோணுதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X