பொது செய்தி

தமிழ்நாடு

'ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருள் நிறுத்தப்படாது'

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: ''ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு, உணவு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது,'' என, உணவுத்துறை அமைச்சர், காமராஜ் தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பன்னீர்செல்வம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி மக்கள், விவசாயத்தை நம்பியுள்ளனர். எனவே, அங்கு நவீன அரிசி ஆலை அமைக்க, அரசு முன் வருமா?அமைச்சர், காமராஜ்: நவீன அரிசி ஆலை அமைக்க, 20 கோடி ரூபாய் தேவை. சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, நிதி நிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.காங்., - விஜயதாரணி: கணவன் இறந்ததால், தனியே வசிக்கும் பெண்கள், ஒரு நபர் ரேஷன் கார்டுகளால் பயனடைந்து வந்தனர். தற்போது, ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு, பொருட்கள் வழங்கப்படாததால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.அமைச்சர், காமராஜ்: ஒரு நபர் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படவில்லை.இவ்வாறு அமைச்சர் கூறியதற்கு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரும், ஒரு நபர் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.அமைச்சர், காமராஜ்: ரேஷன் கார்டுகள் ஆய்வின் போது, ஒரே குடும்பத்தில் வசித்து வரும், 33 ஆயிரம் பேர், ஒரு நபர் ரேஷன் கார்டுகள் வைத்து, பொருட்கள் பெறுவது கண்டறியப்பட்டது.அந்த கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு, பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் தெரிவியுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201902:57:51 IST Report Abuse
Bhaskaran ஒருநபர் தனியாக வசிக்ககூடாதா அவர்களுக்கு ரேஷன் கட் செய்வது என்ன நியாயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X