மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி : தி.மு.க., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி : தி.மு.க., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: 'மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - நடராஜ்: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள, பார்வை குறைபாடுடைய, மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்க, அரசு ஆவன செய்யுமா?அமைச்சர், செங்கோட்டையன்: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் நடந்த, தகுதி தேர்வுகளில், 417 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், 239 பேர் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.நடராஜ்: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பணி நியமனம் நடந்து வருகிறதா?அமைச்சர், செங்கோட்டையன்: இட ஒதுக்கீட்டின்படி, பணி நியமனம் நடந்துள்ளது.தி.மு.க., - பிச்சாண்டி: மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்குமா? பல பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.அமைச்சர், செங்கோட்டையன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-பிப்-201908:48:54 IST Report Abuse
ஆரூர் ரங் ஐம்பத்தேழு வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் .ஒவ்வொருவருக்கும் ஓராண்டு என வேலை கிடைக்கும் . ஆசிரியப்பணி ஒரு சேவை என்பதுதான் எப்போதோ முடிந்த கதையாகிவிட்டதே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:31:15 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல திட்டம்.. ஆனால்உங்கள் ஆட்சியின் பொழுது பணம்தான் தகுதியாக இருந்தது... இப்போ புதுசா என்ன ஞானோதயம்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
12-பிப்-201905:43:12 IST Report Abuse
 nicolethomson தகுதி தேர்வு நடத்தாமல்? தகுதியே இல்லாமல் ஆட்சிக்கு வந்ததற்கு ஒரு கட்சி டாஸ்மாக் தான் பரிசாக கொடுத்தது, அதுபோல நடக்கவேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X