பெரியதாளை கிராமத்தில் புதிய மீன்பிடி இறங்குதளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியதாளை கிராமத்தில் புதிய மீன்பிடி இறங்குதளம்

Added : பிப் 11, 2019
Advertisement

சென்னை: ''துாத்துக்குடி மாவட்டம், பெரியதாளை கிராமத்தில், 55.25 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - கீதா ஜீவன்: துாத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில், படகு அணையும் தளத்தை, வடக்கு பகுதி வரை விரிவாக்க, அரசு முன் வருமா?அமைச்சர், ஜெயகுமார்: திரேஸ்புரத்தில், 5.85 கோடி ரூபாய் மதிப்பில், மீன்பிடி இறங்குதளத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.கீதா ஜீவன்: மீனவர்கள் சேமிப்பு நிதியிலிருந்து, மீன்பிடி தடை காலத்திற்கு, 4,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல், 60 வயதான மீனவர்களுக்கும், மீன் விற்பனையாளர்களுக்கும், மாதம், 1,000 ரூபாய் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர், ஜெயகுமார்: மீன் பிடி தடை காலத்திற்கும், மீன் பிடி குறைவு காலத்திற்கும் நிவாரணம் வழங்குவதால், ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும், நேரடியாக, 19 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.மீன் விற்பனையாளர்களை, கூட்டுறவு சங்கம் துவக்க சொல்லுங்கள்; அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்போம்.அ.தி.மு.க., - சண்முகநாதன்: ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட, பெரியதாளை கிராமம், கடல் அரிப்பால் அழியும் அபாயத்தில் உள்ளது. மீன்பிடி இறங்குதளம், கடலில் மூழ்கியுள்ளது.அமைச்சர், ஜெயகுமார்: பெரியதாளை கிராமத்தில், 2017ல், 800 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட மீன்பிடி இறங்குதளம், கடல் அரிப்பால் மூழ்கிவிட்டது.புதிதாக, 55.25 கோடி ரூபாயில், புதிய மீன்பிடி தளம் அமைக்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X