கழிவுநீர் கசடு மேலாண்மை திட்டம் அமைச்சர் : வேலுமணி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் கசடு மேலாண்மை திட்டம் அமைச்சர் : வேலுமணி அறிவிப்பு

Added : பிப் 11, 2019
Advertisement

சென்னை: ''குன்றத்துார் பேரூராட்சியில், கழிவுநீர் கசடு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பழனி: ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, குன்றத்துார் பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, அரசு முன்வருமா?அமைச்சர், வேலுமணி: குன்றத்துார் பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக, கழிவுநீர் கசடு மேலாண்மை திட்டம், முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.தி.மு.க., - அம்பேத்குமார்: வந்தவாசி தொகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அமைச்சர், வேலுமணி: அனைத்து இடங்களிலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே, வந்தவாசியிலும், கழிவுநீர் கசடு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.அ.தி.மு.க., - பரமசிவம்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம் பாறை பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்பட வேண்டும்.அமைச்சர்: நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - புகழேந்தி: மதுராந்தகம் நகராட்சியில், தி.மு.க., ஆட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, 2010ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தை, 52.65 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்னமும் துவக்கப்படவில்லை.அமைச்சர், வேலுமணி: தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்கள், அறிவிப்போடு நின்று விட்டன. நாங்கள் வந்து செயல்படுத்தி வருகிறோம்.மதுராந்தகம் நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டுஉள்ளது; விரைவில், பணி துவங்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X