இது தான் மிக சிறந்த பட்ஜெட் : துணை முதல்வர் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது தான் மிக சிறந்த பட்ஜெட் : துணை முதல்வர் பெருமிதம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: ''இதுவரை, நான் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே, மிகச் சிறந்த பட்ஜெட், இதுவாக தான் இருக்கும்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.சட்டசபையில், நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதம்:தி.மு.க., - செங்குட்டுவன்: மாநிலத்தின் கடன், 6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறையும் கூடியுள்ளது. தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கிய பெருமை, உங்களையே சேரும்.மின் துறை அமைச்சர், தங்கமணி: இந்த ஆட்சியில் தான் கடன் இருப்பது போல பேச வேண்டாம். தி.மு.க., ஆட்சியில், மின் வாரியத்திற்கு, 9,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. அது மட்டுமின்றி, 15 மணி நேரம் மின்வெட்டும் இருந்தது.கடன் வாங்குவது, காலங்காலமாக இருக்கும் நடைமுறை. தி.மு.க., ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியது போன்று பேசக் கூடாது. கடன் வாங்குவதற்கு முக்கிய காரணமே, உங்கள் ஆட்சி தான்.துணை முதல்வர், பன்னீர்செல்வம்: பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல, இங்கு பேசக் கூடாது.ஒரு மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி என்பது, அந்த மாநிலத்தின் சொந்த வருவாய், மத்திய அரசு வழங்கும் நிதி, மானியம் உள்ளிட்டவை உள்ளடக்கியது.மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, கடன் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை, நான் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே, சிறந்த பட்ஜெட், இதுவாகத் தான் இருக்கும். சட்டியில் இருப்பது, அகப்பையில் வருவதுபோல, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எந்தெந்த துறைகளுக்கு, என்னென்ன திட்டங்கள் தேவையோ, அதை செயல்படுத்தும் அளவிற்கு, ஆரோக்கியமாக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதனால் தான், பலதரப்பட்டவர்களும், பத்திரிகைகளும், பட்ஜெட்டை மனதார பாராட்டுகின்றனர்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201903:41:03 IST Report Abuse
Bhaskaran இனிமேல் பட்ஜெட் தாக்கலாக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமா ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X