சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2,800 கோடி ரூபாய்க்கு, போலி, 'பில்' தயாரித்து, 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement
2,800 கோடி ரூபாய்க்கு, போலி, 'பில்' தயாரித்து, 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

சென்னை: போலி நிறுவனங்கள் பெயரில், 2,800 கோடி ரூபாய்க்கு, போலி, 'பில்' தயாரித்து, 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தவனை, சென்னை, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், போலி ரசீதுகள் தயாரித்து, வரி சலுகைகள் பெறும் நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. இதை தடுக்கும் விதமாக, ஜி.எஸ்.டி., தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.தற்போது, சுஜாராம் என்பவன், 121 போலி நிறுவனங்களின் பெயரில், 2,800 கோடி ரூபாய்க்கு, போலியாக, 'பில்' தயாரித்து, 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளான்.சென்னை, ஏழு கிணறு பகுதியில், 'சிவசக்தி என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை, சுஜாராம் நடத்தி வருகிறான். இவனது பூர்வீகம் ராஜஸ்தான். சென்னையில், பல ஆண்டுகளாக, தொழில் செய்து வருகிறான்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களிடம், 'பான், ஆதார்' அட்டைகள் பெற்று, அவர்களின் பெயரில், ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, போலி நிறுவனங்களை துவக்கிஉள்ளான். இவற்றின் பெயரில், போலி பில்கள் தயாரித்து, நாடு முழுவதும் வினியோகம் செய்து உள்ளான். இதில் தொடர்புடைய, ரூபஸ், சீனிவாசலு இருவரும், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு மூளையாக செயல்பட்ட, சுஜாராம், ராஜஸ்தானுக்கு தப்பினான். ஜி.எஸ்.டி., வடக்கு ஆணையர், எம்.ஸ்ரீதர் ரெட்டி உத்தரவில், தடுப்பு பிரிவு உதவி ஆணையர், ஜி.ஏ.ஹர்சானந்த் தலைமையிலான, ஆறு பேர் அடங்கிய குழு, ராஜஸ்தான் சென்று, சுஜாராமை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.பின், பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவனது அலுவலகத்தில் நடத்திய சோதனையில், போலி பில்கள், 'ரப்பர் ஸ்டாம்ப்' உட்பட, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
14-பிப்-201905:08:30 IST Report Abuse
Vetri Vel குஜராத் காரன் தப்பியிருப்பான்... கொள்ளையடிக்க தமிழகம்... உல்லாசத்தில் திளைக்க வட நாடு மோசடிகள் ... எங்கள் தமிழகத்தில் வந்து... உஷாரய்யா உஷாரு...
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
13-பிப்-201918:31:46 IST Report Abuse
hasan மார்வாடி வரி கட்டின வரலாறு உண்டா , தென்னிந்தியர்கள் வரி வருவாயில் தான் வடஇந்திய கொள்ளை கும்பல் வாழ்கிறது , சௌகார் பேட்டை எல்லாம் வருமான வரி துறை கண்ணுக்கு தெரியாது ,
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
13-பிப்-201916:01:43 IST Report Abuse
Jaya Ram அய்யா நம்முடைய கணக்குகளை ஆங்கிலத்தில் வரவு செலவு செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள், ஆனால் அவர்களோ எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது ஹிந்தியில் தான் வரவு செலவு செய்வோம் என்று சொல்லி அதிகாரிகளை ஏமாற்றுவார்கள் இது காலம் காலமாக நடந்து வருவதுதான் அதனாலதான் வட இந்தியாவில் வரி வசூல் மிகவும் குறைவு ஆனால் அவர்கள் திறைமைசாலிகள் இங்கு வரும் வரிவசூலைவைத்து இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு செலவழிக்கிறார்கள் ஆக உழைக்க ஒருவன் உண்டு திளைக்க ஒருவன் என்ற நிலையில்தான் இந்திய உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X