'டாஸ்மாக்' விற்பனை ரூ.26 கோடி வருவாய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' விற்பனை ரூ.26 கோடி வருவாய்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: டாஸ்மாக்' மது விற்பனை வாயிலாக, 2017 - 18ல், தமிழக அரசுக்கு, 26 ஆயிரத்து, 798 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை மது கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள்; ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர்; ஒரு நிறுவனத்திடம் இருந்து, ஒயின் கொள்முதல் செய்கிறது.மதுபானங்கள் விற்பனை மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி, மதுபான உற்பத்தியாளர்கள் செலுத்தும் ஆயத்தீர்வை ஆகியவற்றின் வாயிலாக, தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த வருவாயில், மது விற்பனை வாயிலாக கிடைக்கும் வரி வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது.டாஸ்மாக், 2017 - 18ம் நிதியாண்டில், 31 ஆயிரத்து, 758 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாக, அரசுக்கு, 26 ஆயிரத்து, 798 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இது, 2016 - 17ல், 26 ஆயிரத்து, 995 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவால், 2017ல், டாஸ்மாக், 1,000க்கும் மேற்பட்ட மது கடைகளை மூடியது, வருவாய் குறைவிற்கு முக்கிய காரணம். தற்போது, நீதிமன்ற உத்தரவால் மூடிய, அனைத்து மது கடைகளையும், டாஸ்மாக் மீண்டும் திறந்துள்ளது.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
12-பிப்-201905:45:35 IST Report Abuse
 nicolethomson கேவலமான நிலை
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201903:37:21 IST Report Abuse
Bhaskaran பாலு சின்னம்மா ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு இதன்மூலம் எவ்வளவு வரவு வந்தது என்பதையும் சொல்லியிருக்கணும் அவர்களின் ஆலையில்தானே சரக்கு கொள்முதல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X