சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருந்து தட்டுப்பாடு: நோயாளிகள் பாதிப்பு

Added : பிப் 11, 2019
Advertisement

சென்னை: அரசு மருத்துவமனைகளில், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில், 'ஆன்டிபயாடிக்' மற்றும் 'இன்சுலின்' மருந்துகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தீவிர சளி பிரச்னை, இதயம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான மருந்துகள், அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை.எனவே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, தனியார் மருந்து கடைகளில், மருந்துகளை வாங்கிக் கொள்ளும்படி, டாக்டர்கள் பரிந்துரை சீட்டுகளை அளிக்கின்றனர்.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:அரசு மருத்துவமனையில், சில மருந்துகள் இல்லை எனக் கூறி, தனியார் மருந்து கடைகளுக்கு அனுப்புகின்றனர். விலை அதிகமாக உள்ளதால், இத்தகைய மருந்துகளை அடிக்கடி வாங்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது:மூலப்பொருட்கள் விலை உயர்வால், அரசுக்கு மருந்துகள் வழங்கி வந்த நிறுவனங்கள், உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால், அரசு மருத்துவமனைகளில், சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு உள்ள மருந்துகளை, 'சப்ளை' செய்ய, ஒப்பந்தம் கோரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X