ஓராண்டில், 'ஆன்லைன்' முறையில் 25 லட்சம் பத்திரங்கள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓராண்டில், 'ஆன்லைன்' முறையில் 25 லட்சம் பத்திரங்கள் பதிவு

Added : பிப் 11, 2019
Advertisement

'ஆன்லைன்' வாயிலாக, ஓராண்டில், 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகியுள்ளன.தமிழகத்தில், ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவு திட்டம், 2018 பிப்., 12ல், துவங்கியது. இதற்காக, 'ஸ்டார் 2.0' என்ற, புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் துவங்கி, இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆன்லைன் முறையில், ஓராண்டில், 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பதிவுத்துறைக்கு, 10 ஆயிரத்து, 543 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று வழங்கும் திட்டம், டிசம்பர், 10ல் துவக்கப்பட்டது. இதுவரை, வில்லங்கச் சான்று கோரி, 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 2.25 லட்சம் பேருக்கு, வில்லங்க சான்றுகள் அனுப்பப்பட்டு உள்ளன.சான்றிட்ட பிரதி ஆவணம் கோரி, 65 ஆயிரத்து, 469 பேர் விண்ணப்பித்துள்ளனர்; அவர்களில், 63 ஆயிரத்து, 152 பேருக்கு சான்றிட்ட பிரதி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. திட்டத்தின் வெற்றிக்கு, பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், சார் - பதிவாளர்கள் என, அனைத்து தரப்பினரும் முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X