விமான பயணியருக்கு காது, மூக்கில் ரத்தம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: மஸ்கட்டிலிருந்து, கோழிக்கோடுக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயணிகள் சிலருக்கு, காது, மூக்குகளில் ரத்தம் வழிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.மத்திய கிழக்கு நாடான, ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து, மூன்று குழந்தைகள் உட்பட, 185 பயணியருடன், ஏர் இந்தியா விமானம், கேரள மாநிலம், கோழிக்கோடுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில், அழுத்தம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. விமானத்துக்குள் காற்று அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இந்த அழுத்தம் ஏற்பட்டது.இதனால், பயணியர் சிலருக்கு காது மற்றும் மூக்குகளில் பாதிப்பு ஏற்பட்டது. நான்கு பயணியருக்கு, மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. மேலும், சிலருக்கு காதுகளில் வலி ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும், மஸ்கட்டில் தரையிறக்கப்பட்டது. விமான நிலைய டாக்டர்கள், பயணியருக்கு சிகிச்சை அளித்தனர்.கடந்தாண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு புறப்பட்ட, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டதில், 30 பயணிருக்கு, காது, மூக்கில் ரத்தம் வழிந்தது குறிப்பிடத் தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:45:02 IST Report Abuse
Srinivasan Kannaiya பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கேள்விகுறியாகி வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X