ஒலிபெருக்கிக்கான தடை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு| Dinamalar

ஒலிபெருக்கிக்கான தடை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : பிப் 11, 2019
Advertisement

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, பா.ஜ., தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேற்கு வங்கத்தில், திரிணமுல், காங்., தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 2013ல், பள்ளி தேர்வுகளை கருதி, பிப்ரவரி - மார்ச் மாதங்களில், குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில், ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஒலிபெருக்கி மீதான தடை, தங்கள் பிரசாரத்துக்கு பிரச்னையாக இருக்கும் என கருதிய, மேற்கு வங்க, பா.ஜ., தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.மேற்கு வங்க, பா.ஜ., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விபரம்:ஒலிபெருக்கிகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை, வரும் தேர்தல்களில், பா.ஜ., வின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பாதகமாக இருக்கும். மாநில அரசின் உத்தரவு, சுற்றுச்சூழல் சட்ட வரம்பிற்கு மீறியதாக உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை நேற்று பரிசீலித்த உச்ச நீதிமன்றம், 'தேர்தல் பிரசாரத்தை விட, குழந்தைகளின் படிப்பு மிக முக்கியமானது' எனக் கூறி, தள்ளுபடி செய்தது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X