சிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி

Added : பிப் 11, 2019
Advertisement

புதுடில்லி: சிறுபான்மையினர் யார் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தேசிய சிறுபான்மையினர் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில், சிறுபான்மையினர் யார் என்பதை நிர்ணயிக்க வேண்டும்' என, டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான, அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்து, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் முறையிடும்படி, உச்ச நீதிமன்றம் கூறியது.புதிய மனுஇந்நிலையில், அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில், அவர் கூறியுள்ளதாவது:கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், ஹிந்துக்கள், சிறுபான்மையினராக உள்ளனர்.ஆனால், சிறுபான்மையினர் பிரிவில், ஹிந்துக்கள் இல்லாததால், இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், சிறுபான்மையினருக்கான வசதிகளை, ஹிந்துக்கள் பெற முடியவில்லை.சிறுபான்மையினர் குறித்து தேசிய அளவில் கணக்கெடுக்காமல், மாநிலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்காக, சிறுபான்மையினர் குறித்த விளக்கத்தில் திருத்தம் செய்ய வேண்டும். உத்தரவுமேலும் சிறுபான்மையினருக்கான அந்தஸ்தை நிர்ணயிக்க வழிமுறைகளில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரணைக்கு ஏற்ற, உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும் படி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X