இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு அரசுக்கு, 'நோட்டீஸ்'

Added : பிப் 11, 2019
Advertisement

புதுடில்லி: பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.'கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, சமீபத்தில், பார்லி.,யில் நிறைவேறியது.இதை எதிர்த்து, வங்கலா ஈஸ்வரய்யா என்பவர் உள்ளிட்டோர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'இடஒதுக்கீடு அளிப்பதற்கு, பொருளாதார சூழ்நிலையை வரையறையாக கருத முடியாது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுஉள்ளது.இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X