மோடிக்கு எதிராக பேசும் கட்கரி: ம.பி., மாநில காங்., விமர்சனம் | Dinamalar

மோடிக்கு எதிராக பேசும் கட்கரி: ம.பி., மாநில காங்., விமர்சனம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement

இந்துார்: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறிய ஒரு கருத்தை, 'பிரதமர் நரேந்திர மோடி மீதான நேரடி தாக்குதல்' என, காங்., விமர்சனம் செய்து உள்ளது.ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக பல்வேறு வியூகங்களை, பா.ஜ., - காங்., உள்ளிட்ட கட்சிகள் வகுத்து உள்ளன.முன்னிலைபிரதமர் நரேந்திர மோடியுடன் தனியாக மோதி வெல்ல முடியாத நிலையில் உள்ள, காங்., மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நிதின் கட்கரியை, பிரதமர் மோடிக்கு மாற்றாக முன்னிலைப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.'பா.ஜ.,வில் உள்ள தலைவர்களில், நிதின் கட்கரி மட்டுமே தைரியசாலி; பிரதமர் மோடியை எதிர்த்து நிற்கும் துணிச்சல் மிக்கவர், அவர்' என, காங்., தலைவர் ராகுல், சமீபத்தில் பாராட்டு தெரிவித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேயில், பா.ஜ., கூட்டத்தில், நேற்று முன்தினம், நிதின் கட்கரி பேசினார். அப்போது, 'ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புனேயை சுற்றிஉள்ள ஐந்து மாவட்டங்களில் ஜாதிக்கு இடம்இல்லை. 'யாராவது ஜாதி பற்றி பேசினால், அடி கிடைக்கும் என, எச்சரித்து உள்ளேன்' என்றார்.உதைப்பார்இது குறித்து, ம.பி., மாநில, காங்கிரசார், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:புனேயில், நிதின் கட்கரி தெரிவித்த கருத்து, பிரதமர் நரேந்திர மோடி மீதான நேரடித் தாக்குதல். மதவாத அரசியலுக்கு எதிராக, நிதின் கட்கரி பேசியுள்ளார். மதவாத அரசியலை, பா.ஜ., பின்பற்றுகிறது. ஹனுமன் பெயரில் ஓட்டுகளை கேட்போரை, நிதின் கட்கரி எப்போது, அடித்து, உதைப்பார் என கூற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:33:18 IST Report Abuse
Srinivasan Kannaiya கட்கரி அமித்ஷா போல ஜால்ரா அடிக்கவில்லை... கட்கரி கட் அண்ட் ரைட்டாக உண்மையை பேசும் ஒன்லி ஒன் அரசியல்வாதி
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-பிப்-201905:02:59 IST Report Abuse
Cheran Perumal கற்கால நரிக்கதை காங்கிரசின் தற்கால தந்திரம்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-பிப்-201905:00:48 IST Report Abuse
Darmavan ஜாதிக்கும் மதத்துக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் காங்கிரஸ் சிண்டு முடியும் வேலை செய்கிறது.கெடுவான் கேடு நினைப்பான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X