9 வயது மருமகனுடன், 'செக்ஸ்' : 36 வயது அத்தை மீது வழக்கு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (4)
Advertisement

மலப்புரம்: கேரள மாநிலத்தில், 9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த, 36 வயது உறவுக்கார பெண் மீது, போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள, தென்கிபாலம் பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுவனுக்கு, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது.சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனையில், அந்த சிறுவன், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. சிறுவனின் பெற்றோர், இது குறித்து, சிறுவர் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.உதவி மையத்தை சேர்ந்தவர்கள், அந்த சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது, சிறுவனின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும், அத்தை முறை உறவுடைய, 36 வயது பெண் குறித்து, திடுக்கிடும் தகவலை, அவன் தெரிவித்தான்.சிறுவனிடம் ஓராண்டுக்கு மேலாக, அந்த பெண், தகாத முறையில் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பினர், சிறுவனின் வாக்குமூலத்தை பதிவு செய்து, போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், அந்த பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeedamo - Karaikal,இந்தியா
13-பிப்-201912:42:17 IST Report Abuse
Sangeedamo விஷ்ணு பகவான் கல்கி அவதாரம் எடுக்க வேண்டிய தருணம் இது.... வேறென்ன சொல்ல...
Rate this:
Share this comment
Cancel
Senthil - Bangalore,இந்தியா
12-பிப்-201915:20:50 IST Report Abuse
Senthil இதுக்கும், பினராயி ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:48:26 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லோரும் மிருகங்கள் ஆகிவருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X