'ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி'| Dinamalar

'ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி'

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'ராஜதர்மத்தை மீறி விட்டார் மோடி'

புதுடில்லி: ''ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால், பிரதமர் நரேந்திர மோடி, ராஜதர்மத்தை மீறி விட்டார்; அவருக்கு தக்க பாடம் புகட்டுவோம்,'' என, அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, டில்லியில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது:குஜராத்தில், 2002ல், கலவரங்கள் நிகழ்ந்த போது, 'ராஜதர்மம் பின்பற்றப்படவில்லை' என, முன்னாள் பிரதமர், மறைந்த வாஜ்பாய் கூறினார். தற்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆந்திராவில், ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. எங்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.ஆந்திராவுக்கு, மத்திய அரசு அநீதி இழைத்து விட்டது. அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஐந்து கோடி ஆந்திர மக்கள் சார்பில், மத்திய அரசை எச்சரிக்கிறேன். ஆந்திர மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவூட்டவே, இங்கு வந்துள்ளேன்.என் மீதும், என்னை சார்ந்தோர் மீதும் தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம் என, எச்சரிக்கிறேன்; அது, தேவையற்றது. ஒரு மாநிலத்தின் தலைவனாக, என் கடமைகளை நான் செய்கிறேன். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்துகிறோம்.நாட்டை ஆளும் தகுதி, நரேந்திர மோடிக்கு இல்லை. ஆந்திர மக்களிடம் ஏற்பட்டுள்ள மன வருத்தங்களை, மேலும் அதிகரிக்கும் வகையில், குண்டூருக்கு அவர் சென்றுள்ளார்.டில்லியில் அமர்ந்தபடி, எங்களை தவிர்த்து விடலாம் என மோடி நினைக்கிறார்; அது தவறு. நட்பு கட்சிகளின் ஆதரவுடன், எங்கள் நோக்கத்தை அடைவோம்.இவ்வாறு அவர் கூறினார்.எதிர்க்கட்சியினர் ஆதரவு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, டில்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று, அம்மாநில முத்லவர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்த மேடை, மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிக்கும் தளமாக மாறியது.காங்., தலைவர் ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமுல் காங்கிரசின், டெரக் ஓபிரையன், தி.மு.க.,வின், திருச்சி சிவா, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேரில் சென்று, சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.ராகுல் பேசுகையில், ''ஆந்திர மக்களிடம் இருந்து திருடி, அந்த பணத்தை, அனில் அம்பானியிடம், பா.ஜ., அரசு கொடுத்துள்ளது,'' என்றார்.அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ''பா.ஜ., அல்லாது பிற கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், பாகிஸ்தான் பிரதமரை போல், பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார்,'' என்றார்.மாற்றுத்திறனாளி தற்கொலை டில்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று, முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அதில் பங்கேற்க, ஆந்திராவில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளி, தவளா அர்ஜுன் ராவ், ஆந்திர பவனுக்கு வெளியே, 'வீல் சேரில்' அமர்ந்த நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், நிதி நெருக்கடியால் தற்கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.ரூ.60 லட்சம் செலவுஉண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக, ஆந்திராவிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர், டில்லிக்கு, இரண்டு ரயில்களில் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்கள் டில்லியில் தங்குவதற்கும், பிரபல ஓட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில், தங்குமிடம் மற்றும் சாப்பாடு செலவுக்காக மட்டும், தெலுங்கு தேசம் கட்சி சார்பில், 60 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
12-பிப்-201912:52:51 IST Report Abuse
Darmavan ராஜா தர்மத்தை பற்றி பேச இந்த திருஅணுக்கு அருகதை இல்லை.பேரன் பெயரில் பல கோடி சொத்த சேர்த்தவன் தர்மத்தை பற்றி பேச கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
12-பிப்-201909:53:04 IST Report Abuse
Pannadai Pandian பிதற்றளின் உச்சக்கட்டம் இனி துணியை கிழிக்க ஆரம்பித்து விடுவான். இவனுக்குள்ள பயம் என்னவென்றால் ஜெயமோகன் ரெட்டி கட்சி தற்போது பலமாகி வருகிறது. அதனால் தன்னுடைய முக்கியத்துவம் குறைகிறது என்று பயம். அத்தோடு இல்லாமல் இனி ஆந்திராவில் காங்கிரஸ் - தெலுகு தேசம் கட்சி ஒன்று சேர்ந்தால் தான் பாஜக-ஜெகன் கூட்டணியை எதிர்கொள்ள முடியும் என்ற நிலை…. எனவே பயத்தில் உளறி கொட்டுறான்….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X