'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் வருமான வரி பிரச்னைக்கு தீர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் வருமான வரி பிரச்னைக்கு தீர்வு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: வருமான வரி கணக்கு தொடர்பான பிரச்னைகளுக்கு, இனி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தீர்வு காணும் வசதி செய்யப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக்கலில் ஏதாவது தவறு இருந்தால் அல்லது விளக்கம் கேட்டு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பினால், நேரில் சென்று, விளக்கம் அளிக்கும் முறை, அமலில் உள்ளது. இனி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், விளக்கங்கள், பதில்கள், முறையீடுகளை செய்யும் முறை அமலாக உள்ளது.இது குறித்து, வருமான வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:வரி செலுத்துவோர் மற்றும் அதிகாரிகள் இடையேயான நேரடி சந்திப்புகளை தவிர்க்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. 'ஆன்லைன்' மூலமாகவே, கணக்கை தாக்கல் செய்யலாம். இதன் மூலம், காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோர், எந்தத் தொந்தரவுக்கும் ஆளாகக் கூடாது என்பதே, இதன் அடிப்படையாகும்.தற்போது, வரிக் கணக்கு தாக்கலுக்குப் பின், அதன் பரிசீலனையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கணக்கு தாக்கலில் சந்தேகம் இருந்தால் அல்லது விளக்கம் தேவைப்பட்டால், வரி செலுத்துவோர், அதிகாரிகளை நேரில் சந்திக்கத் தேவையில்லை.வீடியோ கான்பரன்ஸ் மூலம், தங்கள் பதிலை தெரிவிக்கும் வசதி செய்யப்பட உள்ளது. வரிக் கணக்கு பரிசீலனை, அதைத் தொடர்ந்து உள்ள நடைமுறைகள், அதிகாரிகள் குழுவுக்கு அனுப்பப்படும். இதனால், அதிகாரிகளின் தலையீடு குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201908:34:55 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல தீர்வாக படுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X