பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் புலி கணக்கெடுப்பு : 200 இடங்களில் கேமரா

Added : பிப் 11, 2019
Advertisement
 முதுமலையில் புலி கணக்கெடுப்பு : 200 இடங்களில் கேமரா

கூடலுார்: முதுமலை வெளிவட்ட பகுதியில், புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக, 200 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுக்கு ஒரு முறை, தானியங்கி கேமரா மூலம், புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நடப்பாண்டு, முதல் கட்டமாக, இப்பணி ஜன., 5ல் துவங்கி, கடந்த, 4ல் நிறைவு பெற்றது.தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, முதுமலை வெளிவட்ட பகுதியில், தானியங்கி கேமராக்கள் மூலம், புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கி உள்ளது. ஐந்து நாட்கள் கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்தவுடன், புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கும்.வனத்துறையினர் கூறியதாவது:முதுமலை வெளிவட்ட பகுதியில், 200 இடங்களில், தலா இரு கேமராக்கள் வீதம், 400 தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு, பணிகள் முடிந்த நாளிலிருந்து, 25 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு நடக்கும். அதில், பதிவாகும் படங்கள், வீடியோக்கள், மூன்று நாட்களுக்கு ஒரு முறை, ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X